பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தில் 44 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் மற்றும் கஞ்சி கலயம் ஊர்வலம் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்