சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

போலீசார் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Update: 2024-08-21 00:11 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விஜயகோபாலபுரம் கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பாடாலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டுவந்த நிலையில் காரை அண்ணாநகரைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (43) என்பவர் விஜயகோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்ச மூர்த்தியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 180ml அளவுள்ள 07 பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் பிரபு குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Similar News