பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் உள்ளதா என அமைச்சர் ஆய்வு செய்தார்
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறைகளையும் பார்வையிட்டார். மேலும், நூலகங்களுக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அவர்களின் வீட்டுக்கே சென்று தேவையான நூல்களை வழங்கும் சிறப்பான திட்டமான “நூலக நண்பர்கள்” திட்டம் குறித்து வாசகர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது இரண்டாம்நிலை நூலகர் செல்வி சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.