எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
பொது மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்கள் மூலம் பிரச்சாரம்
சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஆலோசனையின் படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்டத் திட்ட மேலாளர் சுமதி வழிகாட்டுதலின்படி எச்ஐவி- எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பெண்ணகோணம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு லப்பைகுடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் ஜெயா முன்னிலையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் பார்த்தசாரதி ,மற்றும் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில் கரகாட்டம், ஒயிலாட்டம், மற்றும் பறையாட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கும், ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கும் , பொது மக்களுக்கும் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் ஓசை கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். முடிவில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா நன்றி உரை கூறினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.