உடுமலையில் தமிழக வெற்றி கழகம் கொடி அறிமுகம்

காமராஜர் சிலைக்கு மரியாதை

Update: 2024-08-25 17:13 GMT
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் ஆலோசனைப்படி உடுமலையில் தமிழக வெற்றி கழகம் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை நகர தலைவர் எம்.ராமன் தலைமை வகித்தார்.அதன் ஒரு பகுதியாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பின்னர் கொடி அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.விழாவில் நகரச் செயலாளர் காஜா,பொருளாளர் சந்திரன்,துணைத் தலைவர் பிரபு,துணைசெயலாளர் சையத் இப்ராஹிம், இணைச்செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட உடுமலை ஒன்றிய,நகர,கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News