பள்ளி ஆண்டு விழாவில் அசத்திய மாணவர்கள்

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியான கிரைஸ்ட் கிங் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது

Update: 2024-08-25 17:17 GMT
திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியான கிரைஸ்ட் கிங் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது திருவள்ளுவர் அடுத்த மணவாள நகரில் அமைந்த கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு விழா மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார் பள்ளியின் முதல்வர் ஜூடித் டேனியல் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தக்ஷிணவிஸ் பெர்னான்டோ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கோப்பை கேடயம் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது பேசிய அவர் தான் ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன் அதன் பிறகு பொருள் படித்துவிட்டு இன்று நெடுஞ்சாலைத் துறையில் உதவி போட பொறியாளராக பணியாற்றி வருகிறேன் வாழ்க்கையில் வெற்றி பெறும் அளவிற்கு படிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஊக்குவீர்கள் என்று தெரிவித்தார் நான் கல்வி கற்ற பள்ளியிலேயே வந்து சிறப்பாலைப்பாளராக பங்கேற்க வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கூட கல்வி ஆசிரியர்கள் அருள்ராஜ் பாலாஜி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்

Similar News