ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்துக்கு மாணவர்கள் வருகை!
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்துக்கு இன்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் வருகை தந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகளை அவர்களோடு பேருந்தில் பயணித்து நேற்று சனிக்கிழமை கூட்டி வந்து ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காட்டி மகிழ்ந்தார். இதோ போல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவர்களும் வந்து சைட் மியூசியத்தினை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையில் இன்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் தாலூகா காடல்குடி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக கல்வி சுற்றுலாவாக நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநலலூர் வருகை தந்தனர். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு மையத்தில் உள்ள சைட் மியூசியத்தினை அவர்கள் ஆவலுடன் பார்த்தனர். அதன் பின் சி சைட்டில் உள்ள தொல்லியல் பொருள்கள் மற்றும் அங்குதோண்டப்பட்ட குழிகள் பற்றி கேட்டறிந்தனர். இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நாடாளுமன்றசெல்வி, ஆசிரியர்கள் வனிதா முத்துக்குமாரி, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கரமூர்த்தி , மாரிமுத்து உடற்கல்வி ஆசிரியர் அசோக்குமார் கணிதப் பட்டதாரி ஆசிரியை இளவரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.