திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து சேதம்!
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து சேதமடைந்தது.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து சேதம்! திருப்பூரை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனமானது செயல்பட்டு வருகிறது நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பின்னலாடை நிறுவனம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நிறுவனத்தில் ஒரு பகுதியில் இருந்து புகைமூட்டம் வருவதை கண்ட அப்பகுதியினர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பனியன் துணிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னலாடை நிறுவனமானது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது…