சங்கரன்கோவிலில் கழிவுகளில் தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

கழிவுகளில் தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

Update: 2024-08-26 07:21 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்,சி,ஓ காலனி ரேசன்கடை அருகில் எரிக்கப்பட்ட குப்பையால் ஏற்படும் புகையினால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர். இதனால் கழிவு குப்பையில் தீ வைப்பதால் இதில் வரும் புகையினால் ஆஸ்துமா, மூச்சு திணறல், இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்த குப்பைகளை அப்புறப்படுத்தி கழிவுகளில் தீ வைக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News