கரூரில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
கரூரில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
கரூரில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. கரூர் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா, கரூர் அடுத்த வெங்கமேட்டில் எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, செங்குந்தர் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திமுக மருத்துவரணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் கனிமொழி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் கைத்தறிகதிரவன் கே.பி.கே செல்வராஜ் சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் பி.எம் என்கிற சி.பாஸ்கர் முதலியார், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.எஸ்.தர்மசேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கும், நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளையும், பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்தனர்.