பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.
பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.
பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பாகனத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகனத்தம் அருகே உள்ள ஆவுத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்,கந்தன், அசோகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த வெள்ளியணை காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.