தொழில்பேட்டையில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்.

தொழில்பேட்டையில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்.

Update: 2024-08-26 11:44 GMT
தொழில்பேட்டையில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள். கரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் பணிபுரியும் உள்ளூர் தொழிலாளர்களை வெளியேற்றும் விதமாக நடந்து கொள்ளும் நிர்வாகத்தை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர், வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க கூடாது. ஒப்பந்த அடிப்படையில் பணிகள் வழங்ககூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு வேலை செய்யும் தின கூலி தொழிலாளர்கள் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பல்வேறு சூழ்நிலைகளிலும், கொரோனா காலகட்டங்களில் கூட பணியாற்றி வந்துள்ளார்கள். தற்போது தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் மூலம், வெளி மாநில தொழிலாளர்களை வைத்து வேலை பார்க்க முயற்சித்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். நாங்கள் அனைவரும் தினக்கூலியை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் அரைக்கஞ்சி குடிப்பது கூட இந்த நிர்வாகம் தடுக்க நினைக்கிறது. தொடர்ந்து பணியாற்றி வரும் இந்த தொழிலாளர்களை நிர்வாகம் வஞ்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் டன்னுக்கு சுமை கூலியாக 67 ரூபாய் கொடுப்பதை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் ஊதியமாக பெற்று வருகிறோம். ஆனால், ஒப்பந்ததாரர் முறையில் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி விட்டு அவர்கள் மூலம் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்த பார்க்கிறார்கள். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது எனப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று நிகழ்வு எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினர். எனது தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மனு அளித்துள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றனர்.

Similar News