எம்.பி ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

வடமதுரை பேரூராட்சி குண்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பொது மக்களிடம் நன்றி தெரிவித்தார்

Update: 2024-08-26 15:31 GMT
இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிமணி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமதுரை நேற்று ஒன்றியம் மற்றும் வடமதுரை பேரூராட்சி பகுதிகளான தூங்கனம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், மலைப்பட்டி, பிலாத்து, தென்னம்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன் மற்றும் பாண்டி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, குளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜீவா, காங்கிரஸ் சாமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News