தொழிலாளர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்: மேயர் ஜெகன்
எனது தந்தையார் வழியில் தொழிலாளர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் தலைவர் என்ற முறையில் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியும் துறைமுக தொழிலாளர்கள் சார்பாக ஆகஸ்ட் 28ல் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்கு ஆதரவு வேண்டியும் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்ததித்தனர். அப்போது மேயர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்களின் தோழனாக விளங்கிய எனது தந்தையார் பெரியசாமி வழியிலும் தொழிலாளர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.