திமுகவுக்கு தொகுதிகள் கேட்டுப் பெற  நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் 

கன்னியாகுமரி

Update: 2024-08-27 05:31 GMT
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குருந்தன்கோடு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது.  ஒன்றிய அவைத் தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழக முப்பெரும் விழா மற்றும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார். வருகிற செப்டம்பர் 15, 16, 17 ஆகிய அண்ணா பிறந்தநாள் விழா, கழகம் பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்களை ஒன்றியம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது.            செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திரளாக கலந்து கொள்வது.      குளச்சல் சட்டமன்றத் தொகுதியை தொடர்ச்சியாக  கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் செல்வாக்கு, தொண்டர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் குளச்சல் சட்டமன்ற தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க கேட்டுக் கொள்வது. திமுக தலைவரின் வேண்டுகோளை ஏற்று வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Similar News