திருட முயன்ற வடமாநிலத்தை சேர்ந்தவரை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டார்
எடப்பாடி நாச்சியூர் அருகே இன்று அதிகாலையில் திருட முயன்ற வடமாநிலத்தை சேர்ந்தவரை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் மணி தாக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் வடமாநிலத்தவருக்கு தர்ம அடி கொடுத்து கட்டிப்போட்டு கொங்கணாபுரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்த இச்சம்பவத்தால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய நாச்சியூர் பகுதியில் இன்று அதிகாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் குரும்பபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணி வட மாநிலத்தவரை தட்டிக் கேட்டபோது அந்த வட மாநிலத்தவர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து கை மற்றும் கால்களை கட்டி போட்டு கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட மாநிலத்தவரால் தாக்கப்பட்ட குடும்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..