போச்சம்பள்ளி அருகே சிப்காட் பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பிரபல ஓலா நிறுவனம் கையகப்படுதியதாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் புகார்
போச்சம்பள்ளி அருகே சிப்காட் பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பிரபல ஓலா நிறுவனம் கையகப்படுதியதாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் புகார்
போச்சம்பள்ளி அருகே சிப்காட் பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பிரபல ஓலா நிறுவனம் கையகப்படுதியதாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் புகார் சிப்காட் திட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியரிடம் பாதையை மீட்டுதரகோரி கிராம மக்கள் மனு : பாதையை கிராம மக்கள் பயன்பாடிற்கு கொண்டுவரவில்லை என்றால் மிகபெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசின் சார்பில் சிப்காட் அமைக்க 1379 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அவை பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது சிப்காட் வளாகத்தில் பிரபல மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை, காலனி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஓலைப்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை ஓலா நிறுவனம் கைப்பற்றி தற்பொழுது பாதையை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் இதனை சுற்றியுள கிராம மக்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுவதுடன் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி கிராமத்திற்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த ஐந்தாவது கிராஸ் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இன்று அந்த சாலையை துண்டிக்கும் பணியை ஓலா நிறுவனத்தினர் மேற்கொண்டு இருந்த ணையில் அதனை தடுத்து நிறுத்தினார். பின்னர் சிப்காட் திட்ட அலுவலகத்தில் சிப்காட் திட்ட அலுவலர் இந்து அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் மனுவை அளித்த நிலையில் இதுகுறித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் சிப்காட் நிர்வாகத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வட்டாட்சியர் உறுதியளித்தார். சிப்காட் பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்திவந்த சாலையை துண்டிக்க பணிகள் மேற்கொள்ளபடிருந்த நிலையில் அதனை சுற்றுவட்டார கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.