தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கல்யாணி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இதில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் முடிவுகளை அந்த வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்கிட வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி மருத்துவ வசதி வழங்கிட வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி ஓய்வூதியம் மாதம் 2000 ரூபாய் வழங்கிட வேண்டும், மனு செய்துள்ள அனைவருக்கும் வீடு வழங்குவதோடு, வீடு கட்ட மானியம் 4 லட்சம் என்பதை 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை தொழிலாளர் நல அலுவலரிடம் கொடுத்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர் இந்த போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.