ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ரகுல சமூக அறக்கட்டளை சார்பில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ரகுல சமூக அறக்கட்டளை சார்பில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கோகுலாஷ்டமி பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடினர். கிருஷ்ணன் இளம் வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால் அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுல அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை சார்பில், ராசிபுரத்தில் உள்ள சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக பஜனை மடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், பாமா - ருக்மணி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்தது. கிருஷ்ணர் ராதை சிறப்பாக அலங்கரித்து வண்ணத் தோரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சளிக்கும் விதமாக அழகாக வடிவமைத்து கிருஷ்ணருக்கு பிடித்த பல்வேறு பலகாரங்களை வைத்து சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கிருஷ்ணன் ஆதிசேஷன் நாகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக இதில், சிறுவர், சிறுமியர் கண்ணன், ராதை வேடம் அணிந்து வைபவம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். பெண் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணர், பாமா - ருக்மணி குறித்த பாடல்கள் பாடினர். கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. இந்த வைபவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி குழு, சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயபிரகாஷ் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.