தமிழ் புலிகள் கட்சி, ஜனநாயக அமைப்புகள் எஸ்பி யிடம் புகார்
தமிழ் புலிகள் கட்சி, ஜனநாயக அமைப்புகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி யிடம் புகார் மனு அளித்தனர்.
தூத்துக்குடி தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்யும் நோக்கத்தில் வாட்ஸ் அப் மூலம் செய்தி பகிர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தேவா மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டும் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் புகார் தமிழ் புலிகள் கட்சியின் தலைவராக இருப்பவர் நாகை திருவள்ளுவன் இவரை கொலை செய்யும் நோக்குடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான தேவா என்பவர் தனது வாட்ஸ் அப் செய்தி மூலம் சில தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கனவே தமிழகத்தில் தலித் தலைவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படை மூலம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் அடங்குவதற்குள் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு whatsapp மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி தேவா தகவல்கள் வருமாறு உள்ள சம்பவம் வெளியாகி உள்ளது எனவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தேவா மற்றும் அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டுமென புகார் அளித்தனர் தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்பு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது.