தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவலர் உடற்தகுதி தேர்வு
2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் உடற்தகுதி தேர்வு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது
2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி தேர்வான கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதி தேர்வு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சீருடை பணியாளர் தேர்வு மேற்பார்வையாளர் DIG.ஜெயந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் முன்னிலையில் நடைபெற்றது. 1126 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் மொத்தம் 600 நபர்களில் 361 நபர்கள் கலந்து கொண்டனர். 239 நபர்கள் கலந்து கொள்ளவில்லை, கலந்து கொண்ட 361 நபர்களில் 276 நபர்கள் தகுதி பெற்றுள்ளனர், மீதமுள்ள 85 நபர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்வான 276 நபர்களுக்கு 2-ம் கட்ட தகுதி தேர்வு வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.