முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் பயிற்சி
முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது மாவட்ட ஆட்சியர் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அவர்கள் விரும்பும் திறன் பயிற்சி அளித்திடவும் மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் படைவீரர் விருப்பம் தெரிவிக்கும் பயிற்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி பெற வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அருகில் உள்ள வேறொரு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். எனவே, இத்திறன் பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், உதவி இயக்குநரை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.