புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பின்னர், அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை விஏஓ சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.