திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோட்டில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் இரா. நடன சபாபதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்சிறப்பு அழைப்பாளர்களாக மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணன், மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கூறியதாவது திமுக-வை தலைவர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஆகியோர் மேலும் அரை நூற்றாண்டு காலம் எழுச்சியோடு நடத்த முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்கள் மற்றும் மகளிர் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுஇது குறித்து அனைவருக்கும் சென்று சேரும்வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். கட்சியில், மாணவரணி மகளிர் அணி இளைஞர் அணி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி மகளிர் அணி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி வருகிறார். திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். முழு வீச்சில் செயல்பட்டு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதற்கான தகவல்களை கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டும். வருகின்ற செப்டம்பர் 17-ம் தேதி அன்று, திமுக முப்பெரும் விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஒன்றிய நகர பேரூர் கூட்டத்தை நடத்த வேண்டும் என கட்சி தலைவர் அறிவுறுத்தி உள்ளார். வரும் 10-ம் தேதிக்குள் ஒன்றிய பேரூர் நகர பகுதிகளில் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தொகுதி வாரியாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்படும். வருகின்ற 12-ம் தேதி பரமத்தி-வேலூரில், கட்டப்பட்டுள்ள கட்சியின் தொகுதி அலுவலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதனை நமது இல்ல நிகழ்வாக கருதி அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். திமுகவின் பவள விழா தொடங்க உள்ளதை முன்னிட்டு பரமத்தி வேலூர் பகுதியில் 70 அடி உயர கொடிக்கம்பம் நாட்டப்பட உள்ளது. மேற்கு மாவட்ட திமுகவில் 3 தொகுதிகளின் சேர்த்து 35 ஆயிரம் குடும்பத்தினர்/ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளது. உறுப்பினர்களுக்கு அவர்கள் இல்லம் தேடி உறுப்பினர் அட்டை வழங்கப்படும். 3 தொகுதிகளிலும் இளைஞரணி சார்பாக, நூலகம் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் S.M. மதுரா செந்தில் நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக தலைமை கழகத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இக்கூட்டத்தில் 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அமெரிக்க பயணம், அரசின் சாதனைகள் தொடர வேண்டும். வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் மேற்கு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த ஒன்றிய நகர பேரூர் பகுதிகளில் பொது உறுப்பினர் கூட்டம் நடத்திட வேண்டும். வருகின்ற 12-ம் தேதி பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரால் திறக்கப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய நகர பேரூர் சார்பான நிர்வாகிகளின் பட்டியலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி உறுப்பினர் படிவங்களை உடனடியாக மாவட்ட கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட ஒன்றிய பேரூர்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.