பெயிண்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
மாதவரம் ரவுண்டானா அருகே பெயிண்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்.
மாதவரம் ரவுண்டானா அருகே பெயிண்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம். மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை மாதவரம் ஆந்திரா பஸ் நிலையம் எதிரே மாதவரத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 54 ) என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர் விற்பனை செய்யும் கடை உள்ளது இதற்கு மேல் மாடியில் பொருட்களை இருப்பு வைக்கும் குடோனும் உள்ளது . இதில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் நேற்று வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் பொருட்கள் இருப்பு வைக்கும் குடோனிலிருந்து திடீரென வெண்புகை கிளம்பியதால் அருகில் உள்ளவர்கள் இது குறித்து உடனே காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். அதன் பெயரில் அங்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் பின்னர் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென்று அறை முழுவதும் பரவியதால் செங்குன்றம் , மணலி வியாசர்பாடி ஆகிய தீயணைப்பு நிலையிலிருந்து வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . குடிநீர் லாரிகளின் மூலமாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்ற விவரம் குறித்து மாதவரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் . இந்த கரும்புகையினால் மூச்சுத் திணறல் ஏற்படும் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.