சங்கரன்கோவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-28 16:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி மீது காவல்துறை வழக்குப்பதிந்தது அதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை அனுமதி மீறி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது, பின்னர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியோடு காவல்துறை வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Similar News