விழுப்புரத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் ரத்து இந்து முன்னணி போராட்டம்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் ரத்து இந்து முன்னணி போராட்டம்
விழுப்புரத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம், காவல் துறை சார்பில் மாம்பழப்பட்டு சாலை சரஸ்வதி மகாலில், நேற்று மாலை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வந்து, நேற்று இரவு 7:00 மணி வரை காத்திருந்தனர்.ஆனால், போலீசார் தரப்பில் அதிகாரிகள் வராமல், கூட்டத்தை ரத்து செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி அமைப்பினர், மண்டபத்தின் வெளியே வந்து கோஷமிட்டனர்.கூட்டம் நடத்துவதாக அழைத்துவிட்டு, ரத்து செய்ததோடு, அது குறித்த தகவலையும் கூறாமல் அலைக் கழிப்பதா என்று, அங்கிருந்த போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.அப்போது, அவசர மீட்டிங் காரணமாக டி.எஸ்.பி., வெளியே சென்றுவிட்டதால், இன்று கூட்டம் நடத்தவில்லை.நாளை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்து, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.