ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதித்தேர்வு
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 1130 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து உயர்நீதி மன்ற உத்தரவுப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித்தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி 4 நாட்கள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் முதல் நாள் உடல் தகுதித்தேர்வை மாவட்ட எஸ்.பி. பிரதீப் தொடங்கி வைத்தார். சீருடைப்பணியாளர் தேர்வு மேற்பார்வையாளர், காவல்துறை துணைத்தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். முதல்நாள் தேர்வில் 600 பேர் கலந்துகொண்ட நிலையில் அவர்களுக்கு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயரம், மார்பளவு அளத்தல் நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் தேர்வில் 530 பேர் கலந்து கொண்டனர். 2 நாள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி அடுத்த கட்ட தேர்வு நடைபெறுகிறது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. எந்த முறைகேட்டுக்கும் இடம் தராமல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.