பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் விருப்பம் மனு பெரும் கூட்டம்
முதல்வர் பொறுப்பு முதல்வர் அறிவிக்காமல் வெளிநாடு சென்றது தமிழகத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். பாமக வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி பேட்டி
திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு சமுதாயக்கூடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான தொகுதி செயலாளர் தலைவர் மற்றும் தொகுதி மகளிர் தலைவர் மகளிர் அணி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு விருப்பம் மனு பெரும் கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆல்வின் அமல பிரசன்னா தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியைச் சேர்ந்த பாமகவினர் மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான விருப்பம் மனுவை மாநில செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகியிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பாமக உட்கட்ட அமைப்புகளை மேம்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் கட்சியை பலப்படுத்தும் விதமாக புதிய நிர்வாகிகள் பதவி கொடுப்பது குறித்தான விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசயத்தை பின் பதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பொறுப்பு முதல்வர் அறிவிக்காமல் சென்றது தமிழகத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்லும் நோக்கில் உள்ளதாக தெரிவித்தார்.