உயிர் ஓடும் வரை விளையாட்டில் பங்கேற்க வேண்டும் : மேயர்
உடம்பில் உயிர் ஓடும் வரை விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று தூத்துக்குடியில் விளையாட்டுப் போட்டியில் பரிசளிப்பு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த இரண்டு மாத காலமாக குடியரசு தின தடதள போட்டிகள் நடைபெற்று வந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் கடந்த இரண்டு நாட்களாக இறுதிப் போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மேயர் பேசுகையில் "தூத்துக்குடியில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் சைக்கிளில் பயணம் செய்தனர் அதன் மூலம் உடல் ஆரோக்கியம் இருந்தோம் அப்போது அந்த காலத்தில் இருசக்கர வாகனங்கள் விரல்விட்டு எண்ணி விடலாம் அந்த அளவு தான் இருந்தது இது போட்டி நிறைந்த உலகம் கல்வி அசைக்க முடியாத சொத்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் விளையாட்டு முக்கியம் உடற்பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு விளையாட்டுப் போட்டிக்கு பல்வேறு வகையில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது கிராமப்புறம் மாணவர்கள் மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பங்கேற்க வேண்டும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் அதில் 8 மணி நேரம் தூங்குவது போக மீதி 16 மணி நேரம் படிப்பு விளையாட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எல்லோராலும் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை நாம் உருவாக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்வி அடைந்தால் ஒரு நாள் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் முயற்சி செய்தால் அது வெற்றியாக அமையும் உடம்பில் உயிர் ஓடும் வரை விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பேசினார். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அதிர்ஷ்டராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்