திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் திரவியம் மகன் மிகாவேல். இவர் கிருஷ்ணர் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து களக்காடு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராமேஸ்வரன் களக்காடு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் மிகாவேல் மீது இன்று வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.