நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி!
நாசரேத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய அளவில், கண் மருத்துவமனைகளும், அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகிறது இதன் வழியில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நாசரேத்தில் நடைபெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நாசரேத் காவல் நிலையம் அருகில் உள்ள சீரணி கலைரங்கத்தில் இருந்து பேரணி ரெயில்வே பீடர் ரோடு, மர்க்காசிஸ் ரோடு, சந்தி வழியாக மர்க்காசிஸ் பள்ளி மைதானத்தில் இனிதே பேரணி நிறைவு பெற்றது. இந்த பேரணியில் மாணவ மாணவியர்கள் மற்றும் 500 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்தான விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.