தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்மேளனம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஏ ஐ டி யூ சி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கதிருச்செங்கோடு நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஏஐடியூசி தலைவர் ஜெயராமன் மற்றும் மாவட்ட ஏ ஐ டி யு சி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்யும் உரிமையை பறித்து பயணிகளிடம் கொள்ளையடிக்கும் ஓலா, உபர், ரேபிட்டோ ஆகிய நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஆட்டோ செயலியை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் 50 ரூபாய் என்றும் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை தனியார் மையமாக்க கூடாது என்றும், சட்டத்திற்கு புறம்பாக ஓடும் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தியும், வீடு இல்லாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வீடு வழங்கவும், வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும், தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், 3 புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பெட்ரோல் கேஸ் டீசல் மானிய விலையில் வழங்க வலியுறுத்தியும், நல வாரியம் மூலம் 60 வயது முடிந்த ஓட்டுனர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இ எஸ் ஐ மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கூறும்போது ஆட்டோ தொழிலாளர்களை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒழிக்க வேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக உள்ளது அதனை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் இ எஸ் ஐ வழங்க வேண்டும் வீடு இல்லாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வீடு வழங்க வேண்டும் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏ ஐ டி யு சி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.