வாக்குச்சாவடி பட்டியல் முன்மொழிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!!

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ச.உமா, தலைமையில் வாக்குச்சாவடி பட்டியல் முன்மொழிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-08-29 11:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குச்சாவடி பட்டியல் முன்மொழிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தால் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 1,628 பாகங்களில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இல்லை. 1,628 வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ள கட்டிடங்கள் பழுதடைந்ததன் காரணமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பள்ளிகளால் பயன்படுத்தபடுவதாலும், 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்டிடம் மாற்றம், அமைவிடம் மாற்றம் பெயர் மாற்றம் மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்த்தீபன் (நாமக்கல்), செ.சுகந்தி (திருச்செங்கோடு), அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி/ நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News