உடுமலையில் நீட் தேர்வில் தையல் தொழிலாளியின் மகன் வெற்றி
பல்வேறு தரப்பினரும் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் வசித்துவருபவர் சதீஸ் அப்பா தையல் தொழிலாளி அம்மா தினசரி கூலி இருப்பினும் பாடங்களை அதிக ஆர்வத்துடன் படித்துபணிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளி முதல்மானவாய் வந்திருக்கிறார்சதீஸ் ஆர்வத்தை கண்ட பள்ளி ஆசிரியர்கள் அவரை நீட் தேர்வு எழுதிட ஊக்குவித்ததுடன் அதற்கான புத்தகங்களும் வாங்கிகொடுத்திருக்கிறார் சில மாதங்கள் பயின்று முதல்முறையாக எழுதிய நீட் தேர்வில் தோல்வியை தழுவ மனம் தளராத அவர் உடுமலையிலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிகமான திண்டுக்கல் மாவட்ட பழநிக்கு பயிற்சி வகுப்புகளுக்கு தினமும் சென்று பயின்றார்பயிற்சி வகுப்புகளிலும் படிப்பு பற்றாக்குறைக்கு வீட்டிலும் படிப்பு என இடைவிடாத அவரது முயற்சிக்கு பலனாய் அவர் வசித்துவரும் சிமெண்ட் சீட் வேய்ந்த சின்ன வீட்டில் மலர்ந்தது மருத்துவர் கணவுஆம் நீட்தேர்வில் வெற்றி பெற்று (515 மதிப்பென்) அரசு பள்ளியில் படித்தோர்க்கான இட ஒதுக்கீட்டில்திருப்பூர் மருத்துவ கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்தங்களது வறுமையிலும் தனக்கு உறுதுனையாக இருந்த பெற்றோரையும் தனக்கு அரசுபள்ளியில் படிப்போர்க்கான இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி நீட்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவபடிப்பு படிக்கலாம் என அறிவுரைகூறி உதவிகள் புரிந்த உடுமலை ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதோடுஅரசுபள்ளியில் பயிலும் மாணவர் இட ஒதுகீட்டை பயண்படுத்திகொண்டு அதிக கட்டனங்களை தவிர்த்து மருத்துவபடிப்புகளை படிக்கலாம் என தனதுகருத்தையும் தெரிவிக்கிறார் சதீஸ்மருத்துவபடிப்பெல்லாம் வசதிபடைத்தவர்க்கே என்று முடங்கி கிடக்காமல் தையல் தொழிலாளி மகனுக்கும் மருத்துவபடிப்பு சாத்தியமே என தொடர்முயற்சியாய் படித்து சாதித்துகாட்டியிருக்கும் சதீஸ் ஏழ்மையில் இருந்து உயரநினைக்கும் மானவர்களுக்கு முன்னுதாரனமே.. என்று கூறினால் அது மிகையாகாது