திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சியோடைப்பபட்டி அனுகிரகா கல்லூரியில் அறிவியல் ஆய்வகம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நொச்சியோடைப்பபட்டி அனுகிரகா கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வகம் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்தில் `எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்கஸ்` பொருட்களை பயன்படுத்தும் முறை மற்றும் அறிவியல் ஆய்வக உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் ஜான் பிரிட்டோ, முதல்வர் பெர்ணாட்ஷா மற்றும் இயற்பியல் துறை தலைவர் சகாயராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். அறிவியல் ஆய்வக வல்லுநர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் லியோ ஜோசப் சிறப்பு உரையாற்றினர். இந்த ஆய்வரங்கத்தில் பள்ளி மாணவர்கள் பயன் பெற்றனர். பேராசிரியர்கள் காஞ்சனா மற்றும் சுகிர்தா வழிநடத்தினர்.