அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
கந்தாவகோட்டை வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், கர்ப்பிணிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பெண்கள் கர்ப்பம் அடைந்ததிலிருந்து பிரசவம் ஆகும் வரை ஸ்கேன், ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு மேலும் உடல் பரிசோதனை செய்ய சென்று வருகின்றனர். இவர்களுடன் வருபவர்கள் ஓய்வு எடுக்கும் அறையும்' மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.