அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்ற லாரி பறிமுதல்
சுரங்கத்துறை அதிகாரி நடவடிக்கை
பொங்கலூரை அடுத்த கோவில்பாளையம் அருகே சுரங்கத்துறை அதிகாரி வெங் கடேசன் அந்த வழியாக செல் லும் லாரிகள் அனுமதியின்றி மண் எடுத்துச் செல்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்கண்ட போது அது அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் எடுத் துச் செல்வது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அந்த லாரியை பறிமுதல் செய்த சுரங்கத்துறை அதிகாரிவெங் கடேசன் அதன் டிரைவர் மூர்த்தி என்பதும் தெரிய வந் தது. மேலும் அந்த லாரியின் உரிமையாளர் குண்டடம் ஜோதியம்பட்டியைச்சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து சுரங்கத்துறையை அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.