வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Update: 2024-08-30 03:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தாண்டிக்குடி மங்களம் கொம்பு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (23) என்பவரை கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி புருஷோத்தமன் என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நிலக்கோட்டை அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த குபேந்திர பாண்டியன்(24) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி குபேந்திர பாண்டியன் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,05,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நிலக்கோட்டை புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(33) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மகேந்திரன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Similar News