அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா!
அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா தொடங்கியது
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 42ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 42ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடிபவனி, ஜெபமாலை நடைபெற்றது. பின்னர் 42வது ஆண்டு திருவிழா கோலாகலமாக வானவேடிக்கையுடன் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் மாலை ஜெபமாலை, பிரார்த்தனை நடைபெறும். முக்கிய திருவிழாவானது வருகிற 08-09-2023 அன்று லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அன்றனி புருனோ தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.