பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்!
தூத்துக்குடி பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்!
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மூத்த பட்டியல் வழக்கறிஞர் கே. ரெங்கநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சாந்தினி கௌசல் முன்னிலை வகித்தார். முகாமில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான பிரச்னையிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, தொலைபேசி 1098இன் செயல்பாடு, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.