ஊத்தங்கரையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது புதியதாக வெண்கல வடிவில் விநாயகர் சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது புதியதாக வெண்கல வடிவில் விநாயகர் சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது புதியதாக வெண்கல வடிவில் விநாயகர் சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூர் பகுதியில் முத்து கலைக்கூடம் சார்பில் சிற்பி முத்து என்பவர் கடந்த 20 ஆண்டுகாலமாக விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு இந்த ஆண்டு புதியதாக வெண்கல வடிவில் விநாயகர் சிலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் இங்கு அரசு விதிகளை முறைகளை பின்பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஒரு அடி முதல் 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஐந்து நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களால் தயாரித்து வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை ஒன்று ரூ.100 முதல் ரூ.15000 ஆயிரம் வரை விற்பனைக்கு நடைபெற்று வருவதாகவும். இங்கு புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் தண்ணீரில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் தண்ணீரில் கரைக்கப்படும் போது மீன்களுக்கு நல்ல உணவாக அமையும் என்பது சிறப்பு அம்சம் மேலும் மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர், எலி, நந்தி, வெங்கல விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த ஆண்டு மூலப் பொருட்களை விலை அதிகரித்தாலும் அரசு சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் இந்தாண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தமாக இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் சிலை தயாரிக்கும் பணியாளர்கள்