ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீநிவாஸ் (14). இவர் கொத்தமங்கலம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெறவுள்ள கலைத் திருவிழாவிற்காக நேற்று மாலை 4 மணி அளவில் சகமாணவர்களுடன் அறிவியல் ஆய்வகத்தில் நடன பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரது முகத்தில் ஆசிட் பட்டதில் படுகாயமடைந்தார்.