பழங்குடி மக்களுக்கு மத்திய அரசின் ஜன்மன் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாம்
வாலாஜா அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பிரதமரின் ஜன்மன் பழங்குடி மற்றும் இருளர் இன மக்களுக்கான சிறப்பு முகாமை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் கடப்பேரி ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசின் பிரதமரின் ஜன்மன் (Janman) திட்டத்தில் பழங்குடியினர், இருளர் இன மக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர் பேசியதாவது, “சாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாதவர்களுக்கு உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ போன்ற வசதிகளை ஒரே இடத்தில் வழங்கி உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்க்க இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த முகாம் குறித்து விளக்க வேண்டும் என்றார். இதில், 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை திருத்தம், வக்காளர் அட்டை திருத்தம் மற்றும் 50 பயனாளிளுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில், வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், வட்டாட்சியர்கள் அருள்செல்வம், நடராஜன் (தனி) உட்பட பலர் பங்கேற்றனர்.