ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர் ,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் வெள்ளி காப்பு மலர் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் கடற்கரை, சண்முகம், மணி, உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.