அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல்

தனியார் விடுதியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு - குடும்பத்தினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல்

Update: 2024-08-30 15:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கணபதி (வயது 65) தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இவருக்கு வள்ளி என்ற மகளும் மற்றும் முத்துராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூரில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மாத வாடகைக்கு அறை எடுத்து கல்லூரி மாணவர்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் உள்ள கழிவறைகளை வாரம் தோறும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர் கணபதி ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விடுதியில் உள்ள கழிவறையை ஆசிட் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் கணபதி ஈடுபட்டார். அப்பொழுது திடீரென கணபதி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கணபதியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கணபதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில் தற்போது வரை காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கலைந்து சென்றனர்.

Similar News