மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

Update: 2024-08-31 04:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழி காட்டுதலின் படி அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜ் தலைமையில் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐந்து அம்ச கோரிக்கைகளை இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 16(4)(A) வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இடம் கோரிக்கை மனு கொடுத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆனஸ்ட்ராஜ் மாவட்ட நிதி செயலாளர் குமார் மாவட்ட துணை தலைவர் கந்தன் முத்துக்குமரன் மற்றும் அரசு ஊழியர்களின் ஐக்கிய பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தங்கபாண்டியன் மாவட்டச் செயலாளர் குரிசில்மணி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News