முள்ளிப்பாடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
முள்ளிப்பாடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
முள்ளிப்பாடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சில் உள்ள முள்ளிப்பாடி, சேலைக்காம்பட்டி, தலைவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் புஷ்பராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வேல்முருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி, பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்தும், பள்ளி மாணாக்கர்கள் பயிலும் சூழலுக்கு ஏற்ற மறு கட்டமைப்பு செய்வது குறித்தும், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, பள்ளி மாணாக்கர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பேணுவது, பள்ளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக மதிப்பெண் பெரும் வகையில் கூடுதல் வகுப்பு எடுப்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.