செம்மிபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் ஆய்வு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், செம்மிபாளையம் விக்னேஷ் மஹாலில் செம்மிபாளையம் ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமினை பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகள் மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பாட்டா மாறுதல் உத்தரவு ஆணை, மருத்துவக்காப்பீடு, குடுபம்ப அட்டை பெயர் சேர்த்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) திரு.ரகுநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூப்பாதுகாப்புத் திட்டம்) திரு.குமாரராஜா, பல்லடம் வட்டாட்சியர் திரு.ஜீவா, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பாலசுப்பரமணியம், செம்மிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி ஷீலா புண்ணியமூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.