ராசிபுரம் அருகே நள்ளிரவில் கோவிலில் பூட்டு போட்ட நபர்.காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் கோவிலின் உள்ளே கூல் காய்ச்சி உள்ளிருப்பு போராட்டம்..
ராசிபுரம் அருகே நள்ளிரவில் கோவிலில் பூட்டு போட்ட நபர்.காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் கோவிலின் உள்ளே கூல் காய்ச்சி உள்ளிருப்பு போராட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டி பகுதியில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக கோவில் மூடப்பட்டு தற்போது வழக்கு முடிவு பெற்றதை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவிலானது திறக்கப்பட்டது. கோவிலை அங்காளம்மன் அறக்கட்டளை சார்பில் பதிவு பெற்று அறக்கட்டளை மூலம் கோவிலை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும்(கோவிலில் பூசாரிகள்) தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அங்காளம்மன் கோவிலை பூட்டிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த கோவில் நிர்வாகத்தினர் பூட்டு போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியை அடைந்து புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் பூட்டியிட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பூட்டு போட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் கோவில் நிர்வாகத்தினர் காவல் துறையினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி கோவிலின் உள்ளே கூல் காய்ச்சி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மர்ம நபர் இரவு நேரத்தில் கோவிலில் பூட்டிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.